ஆற்றோரத்தில் சிக்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்

Date:

ஆற்றோரத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் சிக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (17) கசிப்பு உற்பத்தி தொடர்பில் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கசிப்பு உற்பத்திற்கான 200 லீற்றர், 2 இரும்பு பரள், செப்பு குழாய், 1 காஸ் அடுப்பு, 4 அடி நீளமுடைய ரப்பர் குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இக்கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிநடத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்