உதவியாளரை கொன்று கடத்தப்பட்ட வாகனம் மீட்பு!

Date:

வென்னப்புவ, உல்ஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உதவியாளர் கொலை செய்யப்பட்ட பின்னர் திருடப்பட்ட ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வாகனம், நேற்று (15) காலை கண்டி காவல்துறைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உதவியாளரைக் கொன்று வாகனத்தைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள், கண்டி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள பெண்கள் பாடசாலைக்கு முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னர் கண்டி குட் ஷெட் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று, பின்னர் மோட்டார் சைக்கிளில் திரும்பி வாகனத்துக்குச் சென்று வெளியேறுவதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (13) வென்னப்புவ, உல்ஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து, உதவியாளரின் கைகளையும் கால்களையும் கட்டி, அவரைக் கொன்று, வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் இத்தாலியில் வசிக்கும் ஒரு தொழிலதிபர். கண்டி காவல் நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்ட வாகனத்தில் சந்தேக நபர்கள் ‘ICE’ பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வாகனத்தில் இருந்து பல கத்திகளையும் பொலிசார் மீட்டுள்ளனர். கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்