தீ குரலில் த்ரிஷா… ‘முத்த மழை’ பாடல் வீடியோ எப்படி? – இணையத்தில் புது விவாதம்

Date:

‘தக் லைஃப்’ படத்தில் பதிவு செய்யப்பட்ட ‘முத்த மழை’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தீ குரலில் த்ரிஷா இடம்பெற்றுள்ள இந்தப் பாடலும் புது விவாதம் ஒன்றை கிளப்பியுள்ளது.

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் இணையத்தில் வைரலானது. பலரும் அவருடைய குரலைக் கேட்டு மெய் மறந்தார்கள். படத்துக்காக, பாடகி தீ குரலில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது.

ஒரு தரப்பினர் சின்மயி வெர்ஷனையும், இன்னொரு தரப்பினர் தீ வெர்ஷனையும் கொண்டாடிய வண்ணம் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், திரையரங்குகளில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் ‘முத்த மழை’ பாடலே படத்தில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், ‘தக் லைஃப்’ படத்துக்காக படமாக்கப்பட்ட ‘முத்த மழை’ பாடல் வீடியோ இப்போது யூடியூபில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், மேடையில் நடனக் குழுவினர் சூழ, தீ குரலில் த்ரிஷா பாடுவதாக அமைந்துள்ளது ‘முத்த மழை’ பாடல் வீடியோ.

மணிரத்னம் பாணியில் மான்டேஜ் ஆக ‘முத்த மழை’ பாடல் வந்திருக்கும் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேடையில் மைக் ஏந்தியபடி த்ரிஷா பாடியுள்ள காட்சிகளும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல், த்ரிஷாவின் உதட்டசைவுகளுக்கு தீ-யின் குரல் கச்சிதமாக பொருந்தவில்லை என்ற கருத்துகளுடன், சின்மியி வெர்ஷனே த்ரிஷாவுக்கு சரியானதாக இருந்திருக்கும் என்ற புது விவாதமும் கிளம்பியுள்ளது.

வசூல் நிலவரம் என்ன? – மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. விமர்சன ரீதியிலும் சரியாக வரவேற்பு பெறாத இப்படம் வெளியாகி 9 நாட்கள் முடிவில், இந்திய அளவில் ரூ.45 கோடி அளவிலும், உலக அளவில் ஒட்டுமொத்தமாக ரூ.94 கோடி அளவிலும் வசூலாகியுள்ளது. ‘தக் லைஃப்’ படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடிக்கும் மேல் என்பது கவனிக்கத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்