இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் முகமது பகேரி கொல்லப்பட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நாட்டின் பிற ஊடகங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக புரட்சிகர காவலர் படையின் தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டது உறுதியாகியது.
இதுவரை ஈரான் மீது இஸ்ரேல் 5 அலை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.




