சாவகச்சேரியில் சைக்கிள் உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

Date:

சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபைகளில் தமிழ் தேசய பேரவை சார்பில் நியமிக்கப்பட்ட 2 உறுப்பினர்கள், அந்த பதவிகளில் தொடர முடியாது என உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் இலங்கை தமிழரசு கட்சியின் பின்னணியில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவு நாளை (13) நடைபெறும்.

அந்த நகரசபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நியமிக்கப்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர், நகரசபை எல்லைக்கு வெளியில்- சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குள் வசிப்பவர் என தெரிய வருகிறது.

அவரது நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு வருகிறது. அவரது நியமனத்துக்கு இடைக்கார தடைவிதிக்கப்பட்டால், சாவகச்சேரி நகரசபையில் இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.டி.பி கூட்டணியும், தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கூட்டும் சமமான- தலா 7 ஆசனங்களை கொண்டிருக்கும். ஏதாவதொரு தரப்பிலிருந்து பல்டியடிக்கும் உறுப்பினர் வெற்றியை தீர்மானிப்பார். அல்லது திருவுளச்சீட்டு முறை கையாளப்படும்.

சாவகச்சேரி நகரசபையில் ஒரு உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டாலும், சைக்கிள், சங்கு கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க முடியாது. சைக்கிள், சங்கு கூட்டணி 11 உறுப்பினர்களையும், வீடு, வீணை, மான் கூட்டணி 10 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்