சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கயாது லோஹர்!

Date:

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் செப்.5-ல் வெளியாக இருக்கிறது. இப்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் நடித்த ‘த கோட்’ படத்தை அடுத்து அவர் இயக்கும் படம் இது. ‘த கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்‌ஷன் கதை.

இதில் கல்யாணி பிரியதர்ஷன், கயாது லோஹர் ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருக்கின்றனர். வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’, சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ படங்களில் கல்யாணி ஏற்கெனவே நடித்திருந்தார். ‘டிராகன்’ மூலம் தமிழில் அறிமுகமான கயாது லோஹர், ‘இதயம் முரளி’, சிம்புவின் 49-வது படம் என நடித்து வருகிறார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்