செம்மணி மனித புதைகுழியருகே போராட்டம்

Date:

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி வரவேற்பு வளைவுக்கு அருகாக இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் காலத்துக்குக் காலம் பல்வேறு மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால், அவற்றுக்கான நீதி நிலைநாட் டப்பட்டுவிட்டதா? என்று கேட்டால் அதற்கு ‘இல்லை’ என்பதுதான் பதிலாகவுள்ளது.

எனவே. இதுவரை அவதானிக்கப்பட்ட புதைகுழிகளுக்கு நீதிகோரியும், செம்மணிப் புதைகுழியில் சர்வதேச கண்காணிப்பைக் கோரியும், காணாமலாக்கப்பட்டோருக்கான சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை அகழ்வுப் பணிகளை பார்வையிட அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் செம்மணி வளைவுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர்...

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்...

அமைச்சரின் மைத்துனர் மோசடி விவகாரத்தில் கைது!

வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி வழக்கில், அமைச்சர் கே.டி. லால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்