தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் விழுந்த பலாப்பழத்தால் விபரீதம்!

Date:

தெரணியகல, லிஹினியகல பகுதியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததால் அவரது வயிற்றிலிருந்த குழந்தை உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக இந்த சம்பவத்தை சந்தித்தார்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக, வீட்டின் அருகே இருந்த பலா மரம் வீட்டின் கூரையில் விழுந்துள்ளது. மரத்திலிருந்த பலாப்பழம் ஒன்று, கூரையை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இருப்பினும், வயிற்றில் இருந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

தற்போது அந்தப் பெண் கரவனெல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்