காலி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை மாத வயதுடைய குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை இயக்குநர் ரங்க சபாபதிகே தெரிவித்தார்.
மே 17 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, நிமோனியா இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட குழந்தையின் மாதிரிகள் கோவிட் தொற்று என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.



