தமிழ் தேசிய பேரவைக்கும்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான கூட்டணி பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் பக்கம் அறிந்தது.
நாளை (2) இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட வாய்ப்புள்ளது.
உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கான பேச்சில் இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்த புத்திசாதுரியமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து, தற்போது தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிகளுக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இன்று (1) இரவு யாழ்ப்பாணத்திலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் நடந்த நீண்டநேர பேச்சை தொடர்ந்து, கூட்டணி அனேகமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது.
நாளை காலையில் இரு கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட வாய்ப்புள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னதாக, உள்ளூராட்சிசபைகளை பகிர்வது தொடர்பில் இரு தரப்பும் நாளை காலையில் இன்னொரு சுற்று பேச்சை நடத்தவுள்ளனர்.



