ஓமந்தை விபத்தில் படுகாயமடைந்த இந்திய தூதரக உத்தியோகத்தரின் மகனும் உயிரிழப்பு!

Date:

வவுனியா, ஓமந்தையில் கார் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த மே மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பமொன்று பயணித்த கார், டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. காரை செலுத்தியவர் தூங்கியதால் விபத்து நேர்ந்திருக்கலாமென கருதப்பட்டது.

இதில், கரவெட்டி, தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டவரும், யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராக பணிபுரிபவருமான சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார்.

அவரது மனைவியான யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர், மகன் ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மகன் (அக்க்ஷை) இன்று (1) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்