கள்ளமண் ஏற்றிய டிப்பரை சுட்டுப்பிடித்த பொலிசார்

Date:

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் வரணி மந்துவில் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது-

பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாழ் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்தனர். எனினும், டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது. இதையடுத்து கொடிகாமம் பகுதியிலும் பொலிஸார் நிறுத்த முயற்சித்தனர். எனினும் டிப்பர் வாகனம் நிறுத்தாது வரணியை நோக்கி தப்பியோடியது.
இதையடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை தமது வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளனர். டிப்பர் வாகனம் வரணி மந்துவில் வீதியால் திரும்பிச் சென்று வேம்பிராய் நோக்கி மிக வேகமாகத் தப்பியோடியது.

இதன் போது டிப்பரில் இருந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டோர்ச் லைற் மூலம் பிரகாசமான ஒளியை பாய்ச்சியிருந்தனர்.

இதனால் தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் டிப்பார் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கி ரவைகள் டிப்பர் வாகனத்தின் ரயரை வெடிக்கச் செய்ததுடன் எரிபொருள் தாங்கியையும் துளையிட்டுள்ளன

இதையடுத்து டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பித்துள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அறிவியல் மீது நம்பிக்கையில்லாத தமிழ் தேசியம்?

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் கடந்த 110 நாட்களாக நடந்த அகழ்வுப்பணிகள்...

ரஷ்யா- உக்ரைன் இடையே ஒலேஷ்கி நகரில் போர்நிறுத்தத்தை மத்தியஸதம் செய்த ட்ரம்ப் மனைவி

அமெரிக்காவின் முதற்பெண்மணி மெலானியா டிரம்ப், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலேஷ்கி...

சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைகிறது!

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் சில நாட்களாக சுயநினைவிழந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்