ரணிலின் மக்கள் தொடர்பு பிரதானியின் கார் மீது துப்பாக்கிச்சூடு

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவவை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நேற்று (17) இரவு நாரஹேன்பிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் வாகனத்தை வழிமறித்து, பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி வானத்தை நோக்கியும் வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஹல்லோலுவ தாக்கப்பட்டதாகவும், அவரது வசம் இருந்த இரகசிய கோப்பு தாக்குதலின் போது திருடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வாகனத்தில் இருந்த சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவும் இந்த சம்பவத்தில் காயமடைந்தார்.

ஹல்லோலுவ தொடர்பாக சிஐடி விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறித்து அவதூறான அறிக்கையை வெளியிட்டதாகக் கூறி இந்த விசாரணை நடக்கிறது. ஜனாதிபதி கிரேக்கத்தில் ஒரு பெரிய முதலீடு செய்ததாக அவர் கூறியது தொடர்பானது இந்த முறைப்பாடு.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்