ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழி கவனயீர்ப்பை அடக்க நிர்வாகம் நடவடிக்கை – தொழிலாளர்கள் கவலை

Date:

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து நேற்று முன்தினம் தொடக்கம் அமைதியான வழியில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு
போராட்டத்தை பொலீஸாரை கொண்டு நீதி மன்ற தடையுத்தரவு ஒன்றை பெற்று
அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையினை
ஏற்படுத்தியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு இங்கே பொதியிடுங்கள்,அம்பாந்தோட்டை,
புத்தளம், மன்னாருக்கு கட்டி உப்பு கொண்டு செல்வதனை நிறுத்தி ஆனையிறவில்
பொதியிடுங்கள், தொழிலாளர்களுக்கு தினமும் வேலையை வழங்க வேண்டும்,
தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதனை நிறுத்த வேண்டும், உப்பள
முகாமையாளரை மாற்றம் செய்ய வேண்டும்,தொழிலாளர்களுக்கான ஒரு
தொழிற்சங்கத்தை இயங்கவிடு, ரஜ சோல்ட் என்ற பெயரை ஆனையிறவு உப்பு என
மாற்றம் செய் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து அமைதியான முறையில் பந்தல்
அமைத்து எமது கனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த கனயீர்ப்பு போராட்ட அடக்கும் வகையில் தவறான தகவல்களை பொலீஸார் ஊடாக
நீதி மன்றின் கவனத்திற்க கொண்டு சென்று எமது கனயீர்ப்பு போராட்டத்தை
தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் இங்கிருந்து கட்டி
உப்பை மூலப்பொருளாக அம்பாந்தோட்டை, மன்னார், மற்றும் புத்தளத்திற்கு
எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர். எனவே இதனை நாம்
வன்மையான கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்தனர்.

-மு.தமிழ்ச்செல்வன்-

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்