கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று (11) அதிகாலை 4.30 மணியளவில் நுவரெலியா-கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, ரம்பொட பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தின் போது அனைவரின் இதயங்களையும் தொட்ட சம்பவம், தனது குழந்தைக்கு எந்த ஆபத்தும் நிகழாமல் இருக்க தாயொருவர் பாதுகாப்பாக அரவணைத்திருந்த சம்பவம்.
பேருந்தின் நசுங்கிய பாகங்கள் வெட்டப்பட்டு அவர் மீட்கப்படும் வரை தன் குழந்தையைக் கைவிடவில்லை. அவர் தன் குழந்தையை தன் உடலால் கவசமாக பாதுகாத்து, குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த துணிச்சலான தாய் மீட்கப்பட்ட சிறது நேரத்தின் பின்னர் இறந்தார்.
நேற்று (11) அன்னையர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.




