சிரஞ்சீவிக்கு நாயகி ஆகிறார் நயன்தாரா?

Date:

அனில் ரவிப்புடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதன் பட பூஜை முடிந்து முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூனில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இறுதியாக, இப்படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இன்னொரு நாயகியாக நடிக்க கேத்ரீன் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதர கதாபாத்திரங்கள் அனைத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டன.

இதன் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, சிரஞ்சீவி உடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக இருக்கிறது. மேலும், ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ படத்துக்குப் பின் அனில் ரவிப்புடி இயக்கும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அநீதி:

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக புதிதாக உள்வாங்கப்பட்ட பெண்...

மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகரின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளின் இடையூறுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும்...

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்