சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம்: மேலும் 6 மாணவர்களுக்கு விளக்கமறியல்!

Date:

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை காரணமாக மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மேலும் ஆறு மாணவர்கள், பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தால் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, 10 மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி நான்கு மாணவர்கள் (மூன்றாம் ஆண்டு) கைது செய்யப்பட்டு, மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தற்போது, மேலும் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மே மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 10ஐ எட்டியுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன, இதில் கைது செய்யப்பட்ட நான்கு மூன்றாம் ஆண்டு மாணவர்களும் அடங்குவர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்திற்கு மரணதண்டனை விதித்தது சிரிய நீதிமன்றம்

சிரியாவின் கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்காக, முன்னாள்...

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் பிற அரசாங்க...

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாடு!

பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்