அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ், சிங்கள பெண்கள் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றியீட்டியுள்ளனர்.
அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
இவர் கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேர்த்தியாவார்.
இலங்கையைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்னாண்டோ, இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, அவுஸ்திரேலிய பாராளுமன்றம் செல்கிறார்.
இலங்கையில் பிறந்து தனது 12வது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த கசாண்ட்ரா, தொழிலாளர் கட்சியின் சார்பில் ஹோல்ட்டின் விக்டோரியன் பிரிவின் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.




