அதிவேக நெடுஞ்சாலையில் ஆதரவாளர்களின் பேருந்துகள் நிறுத்தியது தவறுதானாம்: ஒரு வழியாக வாய் திறந்த அனுர!

Date:

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக கொழும்பு காலி முகத்திடலுக்கு மக்களை அழைத்துச் சென்ற பேருந்துகள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விமர்சித்தார்.

மேலும் பொறுப்பானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நேற்று இரவு ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், பேருந்துகளை அங்கு நிறுத்த அனுமதித்த ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதை ஆதரித்த தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

“இது நடந்திருக்கக் கூடாத ஒன்று” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு பேருந்திற்கும் பொறுப்பாக ஒரு அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட குறிப்பிட்ட பேருந்துகளுக்குப் பொறுப்பான அமைப்பாளர்களின் பட்டியலைக் கேட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஜேவிபி ஆதரவாளர்கள் சென்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டு, மக்கள் வீதியோரங்களில் உட்கார்ந்து உணவு உண்ட காட்சிகள் வெளியாகி பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்