பெண்களை தனியாக காருக்குள் விட்டுவிட்டும் செல்ல முடியாதா?: இலங்கையில் நடந்த பகீர் சம்பவம்!

Date:

இரத்மலானையில் 81 வயது முதியவர் ஒருவர், தனது 76 வயது மனைவியை காருக்குள் உட்காரச் சொல்லி விட்டு, வங்கிக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் திருடன் ஒருவன் காருக்குள் பலவந்தமாக நுழைந்து, மூதாட்டியுடன் காலை கடத்தி சென்றான்.

ஓடும் காரிலிருந்து குதித்த மூதாட்டி தப்பித்துள்ளார்.

கல்கிசை காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சந்தேக நபர் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை சுற்றி வந்து, உள்ளே தனியாக இருந்த பெண்ணைக் கவனித்து, திடீரென காரில் நுழைந்து பின்னர் காரை ஓட்டிச் சென்றார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தப் பெண்ணை வெளியே குதிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் திடீரென திருடன் நுழைந்தததால் பயந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மூதாட்டி  நகரும் வாகனத்திலிருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி திருட்டு குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட கார் கொழும்பு நோக்கிச் செல்வதைக் கண்டறிந்த காட்சிகள் மூலம் கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதே வாகனம் அன்றைய தினம் மற்றொரு குற்றச் செயலிலும் பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவந்தது – தெஹிவளையில் நடந்த தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவம்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்