உள்ளூராட்சி சபைகளில் உள்ளூர் கட்சிகளே அதிகாரம் செலுத்த வேண்டும்!

Date:

நடைபெற உள்ளது உள்ளூர் அதிகாரசபை தேர்தல். அதில் உள்ளூர் கட்சிகளே அதிகாரம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் கிசோர், தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்து உள்ளூர் அதிகார சபையின் செயற்றிறனை வீணாக்கும் நிலையியை உருவாக்கக்கூடாது என்றும் தமது வாக்குகளை தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகளுக்கு வழங்குவதே காலத்தின் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை முன்னெடுத்து இவ்வாறு சுட்டிக்காட்டிய அவர்கள் மேலும் கூறுகையில் –

தேர்தல் ஆணையகத்தின் குழறுபடியால் எமது வேட்பாளர் பட்டியல் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டபோதும் நாம் எமது உரிமையை சட்டத்தின் மூலம் மீண்டும் பெற்றுக்கொண்டோம்.

இந்த சூழ்நிலையால் மக்களிடம் சென்று எமது கருத்துக்களை சொல்லி பிரசாரம் செய்வதற்கான காலமும் குறைவாகிப் போனது.

பதவிக்காக நாம் தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களின் நலன்களை முன்னிறுத்திய சேவையை செய்யவே நாம் இந்த தேர்தலில் இறங்கியுள்ளோம்.

அதேநேரம் எமது யாழ்ப்பாணம் கல்வி, அறிவு, பண்பாடுகளில் அதி உச்ச நிலையில் இருக்கும் ஒரு மாவட்டம்.

ஆனால் ஒரு பைத்தியத்தையும், 3 பொம்மைகளையும், நிலத்தொடர்போ வாழ்வியல் தொடர்போ இல்லாத ஒரு அமைச்சரையும் நாடாளுமன்றம் அனுப்பியதால் யாழ்ப்பாணத்தின் மானம் கொடிகட்டிப் பறக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.

குதிப்பாக யாழ் மாவட்ட மக்கள் மாற்றம் என்று கூறி பேரினவாத தேசியக் கட்சியான தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்து யாழ்ப்பணத்தை கோமாளியாக்கிவிட்டனர்.

அதனால் தான் கூறுகின்றோம் பொதுத்தேர்தலில் நடந்த குழப்பங்கள் போன்று இந்த உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் ஏற்படக்கூடாது.

அதனால் சாவகச்சேரி மக்கள் நன்கு அறிந்த முகங்களான சங்கு சின்னத்தில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களது கரங்களை பலப்படுத்துவர்கள் என்று நம்புகின்றோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்