45 பெண்ணை முச்சக்கர வண்டியில் கடத்தி கூட்டு வல்லுறவு: 19, 23, 24, 38 வயது காமுகர்கள் கைது!

Date:

45 வயதுடைய பெண் ஒருவர் கடத்தபபட்டு முச்சக்கர வண்டி மற்றும் வீட்டில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் நேற்று (29) வெலிபென்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கடத்தல் சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இரவு 9:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர் அளித்த புகாரில், 28 ஆம் திகதி இரவு சுமார் 8:00 மணியளவில், அவர் நகரத்திலிருந்து தனது வீட்டுக்கு பேருந்தில் திரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது. இரவு 8:50 மணியளவில் அவர் பேருந்திலிருந்து இறங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​முச்சக்கர வண்டியில் வந்த மூன்று ஆண்கள் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி, ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் முச்சக்கர வண்டியை நிறுத்தி, மச்சக்கர வண்டிக்குள்ளேயே அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் தன்னை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் இரண்டு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஒருவரைத் தவிர மற்ற நால்வரும் தனக்குத் தெரிந்தவர்கள் என்றும் அவர் பொலிசில் அளித்த புகாரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19, 23, 24 மற்றும் 38 வயதுடையவர்கள். அவர்கள் நேற்று (30) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்