இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில்

Date:

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான தனது சிறப்பு அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, ரணிலை முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுத்திருந்தது. எனினும், கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி மூலம்- அன்றைய திகதியில் ஆஜராகவில்லை என்று அறிவித்த பின்னர், இன்று ஆஜராகப் போவதாக அறிவித்தார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குறித்து அவர் அளித்த சிறப்பு அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியை அரசு வங்கியில் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ், சாமர முதலமைச்சராக இருந்த முந்தைய பதவிக் காலம் தொடர்பானதுதான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் வழக்குத் தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்