வெளிமாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் ஆட்களை ஏற்றி வந்து புதுக்குடியிருப்பில் அநுரவின் பிரச்சார கூட்டம்!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்திற்காக தென்பகுதி மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து அரச பேருந்துகளில் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வடக்கு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இல்லை. ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலில் நீடித்த ஆதரவு குறைந்து, மக்கள் விழிப்படைந்துள்ளனர். உள்ளூராட்சி தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது தமது தலையில் தாமே மண்ணள்ளி போடுவதாக அமைந்து விடும் என்ற அரசியல் யதார்த்தத்தை உணர்ந்துள்ளதால், தமிழ் கட்சிகளிற்கே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில், வடக்கில் தமக்கு மக்கள் ஆதரவிருப்பதாக மாயை உருவாக்க முயலும் தேசிய மக்கள் சக்தி, தென்பகுதிகளிலிருந்து பேருந்துகளில் மக்களை அழைத்து வந்து வடக்கில் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறது.

உள்ளூராட்சி மன்றங்களில் தமது தரப்பை தவிர மற்றையவர்கள் ஆட்சியை பிடித்தால் நிதி ஒதுக்கமாட்டோம் என மிரட்டல் பாணி பிரச்சாரம், ஏனைய கட்சிகள் அனைத்தும் ஊழல்வாதிகள்- நாம் மட்டுமே சொக்கத்தங்கம், அரச வளங்களை துஸ்பிரயோகம் செய்வதில்லையென பிரச்சாரத்தில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி, நடைமுறையில் அவ்வாறு இல்லையென்பதை அண்மையை சம்பவங்கள் நிரூபிக்கிறது. முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தை நினைவூட்டுவதை போன்ற சம்பவங்களே நடந்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியடைய வேண்டுமென்பதற்காக தமக்கு மக்கள் ஆதரவிருப்பதாக காண்பிக்க அரச பேருந்துகளில் மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்துக்கு தலங்கம, கஸ்பாவ, கம்பஹா, வென்னப்புவ, நிட்டம்புவ, கல்முனைஇ.போ.ச சாலைகளில் இருந்து பேருந்துகளில் மக்கள் புதுக்குடியிருப்புக்கு அழைத்து வரப்பட்டனர். இவற்றில் சில பேருந்துகளை தமிழ்பக்க செய்தியாளர் படம்பிடித்தார்.

ஏனைய பேருந்துகள் கூட்ட மைதானத்தின் பின்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.

spot_imgspot_img

More like this
Related

‘ஹிஜாப் அணியாமல் இசைக் கச்சேரி’ – ஈரானிய பாடகிக்கு 74 கசையடி

ஈரானிய பாடகிக்கும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கும், தலா...

தங்கச்சங்கிலியுடன் மாயமான யுவதி

இத்தாலியில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, குறுகிய கால விடுமுறைக்காக நாடு திரும்பிய...

அம்பாறையில் இரு வேறு கோர விபத்துக்கள்- சகோதரர்களில் ஒருவர் பலி

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் நிந்தவூர் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்