யாழில் தபால்மூல வாக்களிப்புக்கு ஏற்பாடுகள் தயார்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இன்றையதினம் ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பை யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே தெரிவத்தாட்சி அலுவலர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மே மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறும் தருவாயில் இருக்கின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொருத்தவரை 17 உள்ளூராட்சி சபைகளுக்காக 243 வட்டாரங்களில் தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 519 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபை, பதின்மூன்று பிரதேச சபை என பதினேழு உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாளை (இன்று), 25,28,29 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 292 அஞ்சல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. அதற்காக 292 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 21 ஆயிரத்து 64 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருக்கிறது.

இந்த வாக்களிப்பு செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக யாழ்ப்பாண மாவட்டம் 28 வலயங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.

அதற்குப் பொறுப்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்ததாக இன்னொரு 240 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் – என்றார்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி போதைப்பொருள் பாவித்திருந்தார்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், குறித்த பேருந்தின்...

குழந்தையின் தந்தையை கண்டறிய டிஎன்ஏ சோதனை: இலங்கை கிரிக்கெட் வீரருக்கு எதிரான மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

தந்தைவழி உறவை உறுதி செய்வதற்காக, இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர் சம்மிக...

தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு

‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் கைதான சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்