களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டிற்கு சென்று தமிழரசுக் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை தேசிய மக்கள் சக்தியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை களுவாஞ்சிகுடி வட்டார வேட்பாளர் மகேஸ்வரன் ஜனகோபன் மேற் கொண்டுள்ளார். இதையடுத்து, தமிழரசு கட்சி வேட்பாளர் மன்னிப்பு கேட்டார்.
பிரசார பணியின் போது குறித்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டுக்கு சென்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் அவருடனும் அவரின் தாய் தந்தையிடமும் முரண்பட்டுக் கொண்டதுடன் வேட்பாளருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மகேஸ்வரன் ஜனகோபன் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய 21.04.2025 திகதி விசாரணையை மேற் கொண்ட களுவாஞ்சிகுடி பொலிசார் நீங்கள் ஒரு வேட்பாளராக இருந்து கொண்டு இன்னொரு வேட்பாளர்ரென்று தெரிந்து கொண்டு அவரின் வீடு தேடிச் சென்று அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டமை பாரிய குற்றம் என பொலிசார் விசாரணையின் போது எடுத்துரைத்தனையடுத்து தமிழரசுக்கட்சி வேட்பாளர் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கப்பட்டதனையடுத்து குறித்த வேட்பாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.



