மத்துகமவில் உள்ள டார்டன் ஃபீல்ட் தோட்டத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகலவத்தை – தொலஹேன சந்திப்பில் இருந்து செல்லும் களுபஹன வீதியில் இன்று (18) பிற்பகல் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கூர்மையான ஆயுதத்தால் அந்த இளம் பெண்ணின் கழுத்து வெட்டப்பட்டுள்ளது.
இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பது இன்னும் வெளியாகவில்லை. இந்த துயர சம்பவத்தில் சுமார் 25 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.



