கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் தவறி விழுந்த இளம் பெண்ணை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளால் அந்த இளம் பெண்ணை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (10) மதியம் சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு, கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் ஒரு இளம் பெண் விழுந்து நீரில் மூழ்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர், இளம் பெண்ணைக் காப்பாற்ற பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்தார்.
இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த இளம் பெண் கட்டுகஸ்தொடை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்றும், தற்போது கட்டுகஸ்தொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.