தென்னக்கோனுக்கு பிணை!

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, தேசபந்து தென்னகோனை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்