Pagetamil
இலங்கை

விசாரணைக்கு பயந்து மாணவனின் வகுப்புத்தடையை நீக்கிய துணைவேந்தர்!

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நான்காம் வருட சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப் பெறப்பட்டு விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டமைக்கு பல்கலைக்கழக மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை சட்ட நியமனங்களுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு அந்த மாணவனின் தரப்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீளப்பெறப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் கைவிடப்பட்டது.

மாணவன் மீதான குற்றச்சாட்டுப் பற்றி பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட முதன்நிலை விசாரணையில் குறித்த மாணவன் தவறிழைத்ததாக உறுதிப்படுத்திய பின்னரும் அது பற்றிய முறையான விசாரணைகளிற்கு உத்தரவிடவேண்டிய பல்கலைக்கழக துணைவேந்தர் பேரவையின் அனுமதி பெறாமலேயே உயர்நீதிமன்ற வழக்கை நடாத்துவதற்கு பின்னடித்து தன்னிச்சையாக மேற்கொண்ட முடிவு
பல்கலைக்கழக மட்டத்தில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அடுத்துவரும் பல்கலைக்கழக பேரவை கூட்டத்தில் குறித்த விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!