29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (6) சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது, சிறுத்தையின் புகைப்படமொன்றையும் சஜித் வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் சஜித் தனது பேஸ்புக்கில் இட்ட பதிவு வருமாறு-

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த “ஐ-ஒன்” (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, 2025 ஏப்ரல் 5ஆம் திகதியான இன்று, இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுக்கு கொழும்பில் வழங்குவது பெரும் கௌரவமாகும்.

ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு — இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும்.

அதன் கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது — ஒருவேளை குளுகோமா (glaucoma), கெடரெக் (cataract), அல்லது ஏதாவது விபத்து காரணமாக ஏற்பட்ட நிலை — ஆனால் அது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கான சின்னமாகும்.

எவ்வாறாயினும், துரதிருஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை, மேலும் அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதையும் படியுங்கள்

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

வவுணதீவு கொலை சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு சேவை பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!