இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உயர்மட்ட இந்திய-இலங்கை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு, இரண்டு மின் கட்டமைப்புகளின் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியாவும் இலங்கையும் பரிமாறிக் கொண்டன.
திருகோணமலையில் உள்ள எரிசக்தி மையத்துடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தமாகும்.