‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Date:

தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் நான் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அலுவலகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறைத் தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். எனது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் வெளியிலிருந்து உணவைப் பெற்றுக் கொள்ள எனக்கு அனுமதியளிக்கவில்லை.

இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் சிறை தண்டனை அனுபவித்த போது நான் இவ்வாறு நடத்தப்படவில்லை. உண்மையில் இது அரசாங்கத்தின் முடிவா அல்லது சிறை அதிகாரிகளின் தன்னிச்சையான செயலா? என்னைப் போன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள கைதிகள் பலரும் மனிதாபிமானமற்ற முறையிலேயே நடத்தப்பட்டுகின்றனர்.

இன்று சமூக வலைத்தளங்களை அதிகமாக உபயோகப்படுத்துவோர் செல்வாக்கு மிக்கவர்களாகவுள்ளனர். அவ்வாறானவர்களது அழுத்தங்கள் காரணமாகவே எனக்கான மருத்துவ தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டன. நான், துமிந்த சில்வா உள்ளிட்ட பலருக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு விடலாம் என சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பயந்தனர்.

“இந்த கைதிகள் குணமடைய உதவுவதற்காக குறைந்தபட்சம் பால் பவுடர் மற்றும் சீனி வழங்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்,” என்று அவர் கூறினார், இப்போது, ​​தானும் துமிந்த சில்வாவும் இல்லாத நிலையில், மீதமுள்ள கைதிகளுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்