பாப்பரசர் பிரான்சிஸ் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வத்திக்கான் நேற்றைய தினம் (25) வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாப்பரசர் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியுள்ளார். நுரையீரல் தொற்றால் அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக வைத்தியர்கள் கூறினாலும், உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (14.02.2025) பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், நெஞ்சுசளி பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
88 வயதான பாப்பரசர், கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், இதன் காரணமாக தனது உரைகளை வாசிப்பதை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
அன்று (14) காலை ஆராதனை நிகழ்விற்குப் பிறகு, அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த அறிக்கைகள் மற்றும் நிலவரத்தின் மூலம், பரிசுத்த பாப்பரசரின் உடல் நிலை பற்றி மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.