மனைவியின் கடன் சுமையால் கணவன் துயர முடிவு

Date:

மனைவியின் கடன் சுமையால் மனமுடைந்த கணவன் உயிரை மாய்த்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் பெற்ற உறவினர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபரின் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். உடற்கூற்று பரிசோதனைகள் முடிந்ததை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தர் எனவும், அவருடைய மனைவி அதிகளவில் கடன் பெற்றதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதால் உயிரை மாய்த்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சம்பந்தப்பட்ட எல்லா கோணங்களிலும் விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்