Pagetamil
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (22) இரவு மன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன், அவர்கள் பயன்படுத்திய 5 மீன்பிடி படகுகளும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காலங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

Pagetamil

காவல்துறையில் புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்க முடிவு

Pagetamil

நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!