காட்டுப் பகுதியில் 12 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனப்பகுதிக்குள் உள்ள ஊரனிய பிரதேசம் அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் (21) இரவு 10:30 மணியளவில், 12 வயது சிறுவன் வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுவன், கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பகுதியில் இருந்த போது, வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அவரை கண்டுபிடித்து, அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சிறுவன் அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன், வனப்பகுதிக்குள் எவ்வாறு சென்றது என்ற கேள்வி குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை தெரியவில்லை.
சிறுவன் பெலியத்த பகுதியில் வசிப்பதாக கூறினாலும், பெலியத்த பகுதியில் இருந்து 70 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் பூந்தல வனப்பகுதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.