தன்னை விட்டுப் பிரிந்த காதலி இசை நிகழ்ச்சியில் வேறொருவருடன் நடனமாடுவதை கண்ட இளைஞன் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை, ஹுலந்தாவ தெற்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்துள்ளார். எனினும், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலி உறவை முறித்துக்கொண்டுள்ளார்.
காதல் உறவை மீண்டும் தொடர இளைஞன் முயன்றிருந்தபோதிலும், காதலி அதற்கு உடன்படாமலிருந்துள்ளார். இதற்கிடையில், சனிக்கிழமை (22) மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞன், அங்கு தனது முன்னாள் காதலி வேறொரு இளைஞனுடன் நடனமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் நிகழ்ச்சியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய பின்னர், தனி அறையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ளது.