Pagetamil
கிழக்கு

மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய மாணவி

மாணவி ஒருவர் மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து, குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய பேரதிர்ச்சி சம்பவம் ஒன்று வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், 18 வயதான மாணவி ஒருவர் மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து, அதை ஜன்னல் வழியாக வீசியுள்ளார். இச் சம்பவம்பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலை வட்டாரங்களின் கருத்துப்படி, இன்று (23) அதிகாலை 3.30 மணியளவில், வயிற்றுவலி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், அதைப் பற்றிப் பிறருக்கு தெரிவிக்காது, வயிற்றுவலி எனக் கூறி சிகிச்சை பெற்றுள்ளார். ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, வயிற்றுவலிக்கான மருந்து மட்டும் வழங்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் கர்ப்பம் தொடர்பாக சரியான சோதனை மேற்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, அதிகாலை 5 மணியளவில் மாணவி மலசல கூடத்திற்குச் சென்று, அங்கு குழந்தையை பெற்றெடுத்த பின்னர், அதை ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தை வைத்தியசாலை கட்டடத்தின் பிளேட்டில் விழுந்து அழுததை தொடர்ந்து, தாதியர்கள் அங்கு விரைந்து சென்றுள்ளனர். இதன் போது, மாணவி குழந்தையை பெற்றெடுத்தது உறுதியாகியுள்ளது.

உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மாணவிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இருவரும் பாதுகாப்பாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Pagetamil

மாட்டிறைச்சி விலையை ரூ.1700 ஆக குறைப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக்குழு!

Pagetamil

யானைகளின் முற்றுகைக்குள் சிக்கியர் மீட்பு!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

Leave a Comment