மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகாயா இரவுநேர விரைவு ரயில், கல்ஓயா பகுதியில் 141வது ரயில் மைல்கல் அருகே மோதியதில் ஆறு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், இந்த விபத்தில் சிக்கிய குட்டி காட்டு யானை ஒன்று மூன்று நாட்களாக துடித்துக் கொண்டிருந்த நிலையில், கால்நடை மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கும் பலன் அளிக்காமல் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் காட்டு யானைகள் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்க, ரயில் பாதைகளில் கண்காணிப்பு கருவிகளை நிறுவுதல், காட்டு யானைகள் பெரும் எண்ணிக்கையில் சுற்றிவரும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.