கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் “சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம், போகஹ சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த 23 வயதுடைய சந்தேகநபர், கொழும்பு வெல்லம்பிட்டியை சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யும் போது, அவரிடமிருந்து 11 கிராம் 500 மில்லி கிராம் “ஐஸ்” போதைப்பொருள் மற்றும் ஒரு வாள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இந்நிலையில், சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபரின் பின்னணியை ஆராய்ந்து, இவருடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.