கொழும்பில் நூதன வாகன மோசடி

Date:

கொழும்பில் வாகனங்களை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர், அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 100க்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தி குறித்த மோசடியை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நபர், அவற்றை வாடகைக்கு வாங்கிய பின்பு, அவற்றை புதிதாக மாற்றி, வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். இதன் மூலம், பலர் அவரின் மோசடிக்குள்ளாகி, பெரும் நஷ்டத்தை அனுபவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார்… தீவிரமாக செயற்படுகிறார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர்...

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்