சாவகச்சேரியில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் வீதியில் சென்றவர் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. மதுபோதையிலிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று (19) இரவு அவர் உயிரிழந்தார். தாக்குதல் காரணமாக உயிரிழந்தாரா அல்லது பிற காரணமா என்பது பிரேத பரிசோதனையின் பின்னர் தெரிய வரும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1