Pagetamil
இலங்கை

மதுபோதையில் பெண் மாணவிகளுடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!

மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்து மாணவிகளிடம் முறையற்ற விதத்தில்நடந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலய பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்தது.

பணியில் இருக்கும்போது மதுபோதையில் இருந்ததற்காகவும், பாடசாலைக்குள் நுழைந்து மாணவிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதற்காகவும் மல்லாவி பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று (18) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Pagetamil

யாழில் ஜேவிபி வேட்புமனு தாக்கல்

Pagetamil

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் சொத்து என எடுத்தியம்ப ஒரு வாய்ப்பு – சுமந்திரன் கருத்து

Pagetamil

ஈ.பி.டி.பி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

Leave a Comment