பொலிவியாவின் யோகல்லா நகரின் தென்மேற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
பள்ளத்தாக்கு வழியாக பயணம் செய்துகொண்டிருந்த போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து சுமார் 800 மீற்றர் பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் 30 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு, குறித்த மலையோரப் பாதையின் அதிக திருப்பங்கள் மற்றும் பேருந்தின் அதிக வேகம் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1