கிரிஷ் பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு நீண்ட காலமாக அரசியல் மற்றும் சட்டரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று இத் தீர்ப்பு வழங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாமல் ராஜபக்சவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர், நீதிபதி, பிரதிவாதி நாமல் ராஜபக்சவை தலா 10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க உத்தரவிட்டார். .
இந்த வழக்கின் பின்னணியில், நாமல் ராஜபக்ச 70 மில்லியன் ரூபாய் அளவிலான முறைகேடு செய்ததாக கூறப்பட்டுள்ளதுடன், குறித்த தொகை வெவ்வேறு சட்டவிரோத வழிகளில் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது அவரின் அரசியல் எதிர்காலத்திற்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.