மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு துயர சம்பவம் பதிவாகியள்ளது. தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
கடந்த 16ம் திகதி (நேற்று முன்தினம்) இரவு, தாயாரிடம் பால் அருந்திய குழந்தை வழக்கம்போல் உறங்கியது. ஆனால் மறுநாள் அதிகாலை, தாயார் குழந்தையை பால் கொடுப்பதற்காக எழுப்பியபோது, அது எந்தவிதமான நடமாட்டமுமின்றி, மூச்சு விடாமல் இருந்தது.
கலங்கி போன பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிபிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
குழந்தையின் மரணத்திற்கு காரணம் தெளிவாகத் தெரியாததால், உடல்கூறுப் பகுப்பாய்விற்காக, மேலதிக பரிசோதனைக்காக பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




