சுற்றுலாத்துறையால் அந்நிய செலாவணி வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி வருவாய் கடந்த ஜனவரி மாதத்தில் 362 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 34.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறையால் 269 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்திருந்த நிலையில், இம்முறை ஏற்பட்ட வருவாய் உயர்வு நாட்டின் பொருளாதாரத்திற்கு உற்சாகமான மாற்றமாக கருதப்படுகிறது.
அத்துடன், இந்த ஆண்டின் முதல் 44 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது சுற்றுலாத்துறையின் மீளுருதலுக்கு சிறந்த அறிகுறியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.