மியன்மார் சைபர் குற்ற முகாமில் இருந்து 13 இலங்கையர்கள் மீட்பு

Date:

மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 17 இலங்கையர்கள் இந்த குற்ற முகாம்களில் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற நான்கு பேரை விடுவிக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட இலங்கையர்கள் 20 முதல் 30 வயதினர்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. அவர்கள் தற்போது தாய்லாந்து எல்லைப் பகுதியிலிருந்து பாங்கொக்கில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் நோக்கி அழைத்து செல்லப்பட்டு, பின்னர் சுற்றுலா விசா மூலம் நாடு திரும்ப உள்ளனர்.

அதேவேளை, தொழில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு இலங்கையர்கள் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உழைப்பு, துன்புறுத்தல், உணவின்மை, மற்றும் வன்முறைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அவர்களை மீட்க இலங்கை அரசாங்கம், தாய்லாந்து மற்றும் மியன்மார் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், இத்தகைய வேலை வாய்ப்பு மோசடிகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆணைக்குழு, இலங்கை நிலையான வீசா திட்டங்கள் இல்லாத துறைகளில் வேலை தேட அனுமதி இல்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்