துப்பாக்கிச் சூடு முயற்சிகள், துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக தேடப்படும் ஒரு சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் துறையினால் இன்று, 16.02.2025 அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இந்தியாவில் பதுங்கி இருந்த நிலையில், இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
புஷ்பராஜ் விக்னேஸ்வரம் (30) என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது 25 வயது மனைவியும் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் துறையின் விமான நிலையப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஜம்பட்டா தெரு, கொழும்பு 15 என்ற முகவரியை சேர்ந்த சந்தேகநபர், 21.04.2022 அன்று ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
06.01.2018 அன்று கொழும்பு குற்றப்பிரிவால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
25.03.2017 அன்று கொட்டஹேன பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொட்டஹேன பொலிஸ் பிரிவில் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் வைத்திருந்ததற்கு மேலதிகமாக, இந்த சந்தேக நபர் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு நபராவார்.